மரக்காணம் பகுதியில் புயல் கரையை கடந்து 3 நாட்கள் ஆகியும் மின்சாரம் வழங்கப்படாததால், ஆத்திரமடைந்த பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய, கனமழை கொட்டித் தீர்த்தது.
கனமழையால், மரக்காணம் சுற்று வட்டார பகுதிகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. தற்போது புயல் கரையை கடந்து 3 நாட்கள் ஆகிய நிலையில், வசவன் குப்பம் மீனவ கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்படாததால், ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றதால் சென்னை, புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.