சேலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து பொக்லைன் உதவியுடன் கயிறு கட்டி மீட்கப்பட்டது.
சேலத்தில் புதன்கிழமை இரவு கொட்டி தீர்த்த கனமழையால் திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கந்தம்பட்டி பாலம் வெள்ள நீரில் மூழ்கியது.
பாலத்தின் மேலே 6 அடிக்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு பவானிக்கு சென்ற அரசு பேருந்து சிக்கிக் கொண்டது.
அதிலிருந்த பயணிகள் அனைவரும் வெளியேறிய நிலையில் அரசு பேருந்து மட்டும் மீட்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று காலை போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பொக்லைன் உதவியுடன் அரசு பேருந்தை பத்திரமாக மீட்டனர்.