ஓசூர் அருகே சுவர் இடிந்து விழுந்து, கன்றுக் குட்டி ஒன்று இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தது. சூளகிரி அருகே சீபம் கிராமத்தில் நஞ்சப்பா என்பவர், இரண்டு கன்று குட்டிகளை வளர்த்து வருகிறார்.
இவர் வழக்கம் போல் கன்று குட்டிகளை பக்கத்து வீட்டின் அருகே கட்டி உள்ளார். அங்கு பெய்த கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில், அங்கு கட்டப்பட்டிருந்த இரண்டு கன்று குட்டிகளும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டன.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள், மண்ணுக்குள் சிக்கிய ஒரு கன்று குட்டியை மட்டும் உயிருடன் மீட்டனர். மற்றொரு கன்று குட்டி பரிதாபமாக உயிரிழந்தது.