சேலம் கோட்டையில் மழையின் காரணமாக இடிந்து விழுந்த வீட்டில் சிக்கிய இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோட்டை வெங்கடசாமி தெருவில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் இருவர் சிக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து இருவரையும் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசாமாக இருவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.