தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வெறி நாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், முதலியார்பட்டி, பொட்டல்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள், அப்பகுதி மக்களை கடித்துள்ளன. இதில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.