சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் மின் தடை காரணமாக செல்போன் டார்ச் வெளிச்சத்தில் ரயில்வே ஊழியருக்கு செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.
கீழப்பசலை கிராமத்தை சேர்ந்த ரயில்வே ஊழியரான பாலமுருகனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதனையடுத்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.
அவருக்கு செவிலியர்கள் சிகிச்சை அளிக்க முயன்றபோது திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனையடுத்து செல்போனில் உள்ள டார்ச் லைட் உதவியுடன் செவிலியர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
அவ்வப்போது அரசு மருத்துவமனையில் மின்தடை ஏற்படுவதால் பெரும் சிரமம் ஏற்படுவதாக ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர்.