ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், கம்மம் ஆகிய பகுதிகளில் காலை நில அதிர்வு ஏற்பட்டது. சுமார் 1 நிமிடம் நீடித்த இந்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த, மேஜை, நாற்காலிகள் மற்றும் பொருட்கள் சரிந்து விழுந்தன.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். வாகனங்களில் நில அதிர்வால் குலுங்கியதால் வாகன ஓட்டிகளும் வாகனத்தை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 3-ஆக பதிவானது.