ஒரே மாதத்தில் 15 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை படைத்துள்ளது.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் நர்சரிகள் மூலம் விவசாயிகள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் என 15 லட்சத்து 23 ஆயிரத்து 255 மரக்கன்றுகள் நடவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கூறிய இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 82 நர்சரிகள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்தாண்டில் மட்டும் இதுவரை 85 லட்ச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.