போதைப்பொருள் விற்பனை செய்தவர்களிடம் தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் கடந்த மாதம் 3-ஆம் தேதி கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்துவந்த கார்த்திகேயன் என்ற மாணவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கார்த்திகேயன் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 4 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களுடைய செல்போனில் பதிவான எண்களை கொண்டு விசாரணை மேற்கொண்டபோது, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக், கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை ஜெ.ஜெ நகர் காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.