மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் சின்ன உடைப்பு மற்றும் பரம்புப்பட்டி கிராமங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 2013 நில எடுப்பு சட்டப்படி கணக்கெடுத்து நிதி வழங்க வலியுறுத்தியும், அரசு தங்களுக்கு 3 சென்ட் நிலம் வழங்க வலியுறுத்தியும் சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சின்ன உடைப்பு பகுதியில் நிலங்களை கையகப்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்த நிலையில், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். வரும் 11ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சின்ன உடைப்பு கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.