ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட வாகனஓட்டியை பொதுமக்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக கல்லாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால், நெமிலியில் இருந்து நாகவேடு வழியாக அரக்கோணம் செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றில் யாரும் இறங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் ஆற்றை கடக்க முயற்சிக்கவே, அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அருகே இருந்தவர்கள் கயிறு கட்டி அவரை பத்திரமாக மீட்டனர்.