ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில் ரசாயன கழிவுகளால் மீண்டும் நுரை பொங்கி எழுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஓசூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் 623 கனஅடிநீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரசாயன தொழிற்சாலைகள் கழிவுகளை வழக்கம்போல தென்பெண்ணை ஆற்றில் கலந்துவிட்டு வருவதால், அதிகப்படியான நுரை ஏற்பட்டுள்ளது. பாசனத்திற்காக திறந்துவிடப்படும் நீரிலும் நுரைதேங்கி காட்சியளிக்கிறது.
இது குறித்து பல ஆண்டுகளாக புகார் தெரிவித்து வருவதாகவும், ஆனால் இதுவரை அதிகாரிகள் நிரந்தர தீர்வை காணவில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.