கனமழை காரணமாக கொல்லிமலை ஆகாய கங்கை நீர்விழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்துவரும் நிலையில் முக்கிய சுற்றுலா தலமான கொல்லிமலையிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, மாசிலா அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டபோதும், சிலர் எச்சரிக்கையை மீறி அருவி பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.