பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும் என அம்மாநில
முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால், பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு நிலை திரும்பவில்லை. உணவு, குடிநீர் கேட்டும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த கோரியும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புயலால் பாதிப்புக்குள்ளான தமிழகம் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பேரழிவில் இருந்து மீண்டு வரும் தமிழகம் விரும்பும் எந்த உதவிகளையும் வழங்க கேரளா தயாராகவே உள்ளது என பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.