மழை நின்றதையடுத்து சபரிமலைக்கு செல்லும் கானகப் பாதை மீண்டும் திறக்கப்பட்டது.
கேரளாவில் பெய்த கனமழையை தொடர்ந்து சபரிமலைக்கு செல்லும் சத்திரம் – புல்லுமேடு கானகப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது மழை குறைந்து இயல்பான வானிலை திரும்பியுள்ளது.
இதை தொடர்ந்து சபரிமலை கானகப்பாதையை மீண்டும் திறக்க இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.