இருநாட்டு எல்லைப் பகுதியில் உரிய விதிகளை சீனா கடைபிடித்தால் மட்டுமே சுமுக தீர்வு காண முடியும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சீனா- இந்தியா எல்லை பிரச்னை குறித்து அவர் மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது, சீனாவின் நடவடிக்கைகளால் 2020ஆம் ஆண்டு முதல் இருநாட்டு எல்லையில் அசாதாரண சூழல் நிலவுவதாக கூறினார்.
சுமூக தீர்வை எட்ட மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர், முக்கிய 3 விதிகளை கடைபிடித்தால் மட்டுமே இந்த விகாரத்தில் தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளார்.
அதன்படி, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் விதிகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், எந்த தரப்பும் ஒருதலைபட்சமாக செயல்படக் கூடாது எனவும், கடந்த காலங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களை மீறக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.