மேட்டூர் அணையில் நீர் இருப்பு உயர்ந்துள்ள நிலையில், விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாகவும், தொப்பையாறு அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் 9 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 29 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 114 புள்ளி 58 அடியாகவும், நீர் இருப்பு 85 புள்ளி 9 டிஎம்சி ஆகவும் உள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை முழு கொள்ளளவை எட்ட 9 டிஎம்சி மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.