வங்கதேசத்தில் இந்து சமூகத்தை பாதுகாக்கவும், சர்வதேச தலையீடு ஏற்படுத்த வலியுறுத்தியும் இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் உலக இந்து அமைப்பு பேரவை மனு அளித்துள்ளது.
இலங்கையில் ஐக்கிய நாடுகள் அலுவலகம் முன்பு, அந்நாட்டு ஆர்ஆர்எஸ் மூத்த தலைவர் விஜயபாலன் தலைமையில் உலக இந்து அமைப்புகளின் பேரவையை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், சொத்துக்களை சூறையாடுதல் போன்ற சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வாழும் இந்துக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும் ஆர்ப்பாட்டக்கார்கள் வேண்டுகோள் விடுத்தனர்.