தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளர்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அதானியுடன் திமுக அரசு எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
அதானியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கவில்லை என விளக்கமளித்துள்ள செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில்தான் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்ய அதானியின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும், அடிப்படை உண்மை இல்லாத பொய் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் சுமத்தி வருவதாக தெரிவித்துள்ள அவர், அவதூறு பரப்புவோர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.