திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஷோரூமில் இருந்த காரை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆயக்குடி பகுதியில் மாருதி நிறுவனத்தின் கார் ஷோரூம் இயங்கி வருகிறது. ஷோரூமின் முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்த
திருடர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள SWIFT காரை திருடிச்சென்றனர்.
மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்த கொள்ளையர்கள், வீடியோ பதிவாகும் ஹார்டு டிஸ்குகளையும் திருடிச்சென்றனர். இதனிடையே திருடப்பட்ட கார் ஒட்டன்சத்திரம் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த நிலையில் அதை கைப்பற்றிய போலீசார், காரை திருடிய வெள்ளமரத்துப்பட்டியை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மதுபோதையில் காரை திருடிச்சென்றது தெரியவந்தது.