உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கூண்டோடு கலைக்கப்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சியை மறுகட்டமைப்பு செய்வதற்காக, மாநில, மாவட்ட, நகர பொறுப்புகள் உள்பட அனைத்து காங்கிரஸ் கமிட்டிகளும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.