மேக் இன் இந்தியா சூப்பர் : பாராட்டி தள்ளும் ரஷ்ய அதிபர் புதின் - சிறப்பு கட்டுரை!
Sep 5, 2025, 04:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேக் இன் இந்தியா சூப்பர் : பாராட்டி தள்ளும் ரஷ்ய அதிபர் புதின் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Dec 7, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ள ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது என்று கூறியுள்ளார். மேலும், விரைவில் இந்தியா முழுவதும் உற்பத்தி ஆலைகளை அமைக்க உள்ளதாகவும், ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2030ம் ஆண்டுக்குள் ரஷ்யாவுடனான இந்தியாவின் வருடாந்திர இருதரப்பு வர்த்தகம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை அடையும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில், உரையாற்றிய ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவில் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும், பிரதமர் மோடி, தொழில் செய்வதற்கான ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளார் என்றும் பாராட்டியுள்ளார்.

தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் முக்கியத்துவம் அளித்து வரும் பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தையும் ரஷ்ய அதிபர் புதின் பாராட்டியுள்ளார். மேலும்,உற்பத்தியை ஊக்குவிப்பது மற்றும் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ‘மேக் இன் இந்தியா ‘திட்டம், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளதாக புதின் தெரிவித்துள்ளார்.

2013ம் ஆண்டு கடுமையான பொருளாதார தோல்வியின் விளிம்பில் இந்தியா இருந்தது. இந்தியாவில் முதலீடு செய்வது ஒரு அபாயமா அல்லது ஒரு வாய்ப்பா என்று உலக முதலீட்டாளர்கள் விவாதிக்கத் தொடங்கினர்.

இந்த நெருக்கடியான சூழலில், தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியாக 2014 ஆம் ஆண்டு செப்டம்பரில், பிரதமர் மோடியால் மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றும் வகையில் மேக் இன் இந்தியா திட்டம் வடிவமைக்கப்பட்டது.

‘குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆட்சி’ என்ற பிரதமர் மோடியின் கொள்கையின் அடிப்படையில் மேக் இன் இந்தியா திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டம் தேசத்தில் உள்ள வணிகச் சூழல் சாதகமாக இருப்பதை உறுதிசெய்கிறது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக ‘ஒரு மாவட்டம்-ஒரு தயாரிப்பு (ODOP)’ என்ற முன்முயற்சி தொடக்கப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் உள்நாட்டு தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கும், உற்பத்தி செய்வதற்கும், உற்பத்தியாளர்களுக்கு உலகளாவிய தளத்தை வழங்கவும் மத்திய அரசு உதவி செய்கிறது.

அந்நிய முதலீடுகள் அதிகரிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மேக் இன் இந்தியா திட்டம் வழிவகை செய்துள்ளது. குறிப்பாக, சுமார் 101 நாடுகளில் இருந்து அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. 31 யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் சுமார் 57 துறைகளில் இந்த முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கி, கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தால் ஏற்றுமதி அதிகரித்து இந்திய பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது. “இந்தியாவில் தயாரிப்போம்’ என்பது 140 கோடி இந்தியர்களின் கூட்டு உறுதியை வெளிக்காட்டி உள்ளது. உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளின் சக்தி மையமாக இந்தியா மாறி இருக்கிறது.

உள்நாடு, வெளிநாடு வர்த்தகங்களில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 1,46,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் பல்வேறு துறைகளில் வந்துள்ளன.

‘மேக் இன் இண்டியா’ திட்டத்தால் சுமார் 8.5 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஸ்டார்ட்அப் தொழில் இந்தியாவில் உருவாகிறது. இதன் மூலம் 15 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் கடந்த ஜுன் மாதம் வரை 10.90 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி அல்லது விற்பனை நடக்கிறது.

சர்வதேச அளவில் செல்போன்கள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ஆட்டோ மொபைல் தொழிலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டு, இராணுவ தளவாடங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் உற்பத்தி 1,27,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இராணுவ ஏற்றுமதி சுமார் 90 நட்பு நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது.

சர்வதேச அளவில் உருவாக்கப்படும் தடுப்பு மருந்துகளில் 50 சதவீதம் இந்தியாவில் இந்தியாவின் உற்பத்தி ஆகிறது. மேலும், செமி கண்டக்டர் உற்பத்திக்கு 76,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை இந்தியா செயல் படுத்தியுள்ளது.

இந்த சூழலில் தான் ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யாவின் உற்பத்தித்தளத்தை இந்தியாவில் அமைக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்கும் உச்சிமாநாட்டில், SME களின் வளர்ச்சியை மேம்படுத்த பிரிக்ஸ் நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார்.

உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு நிதி பாதுகாப்பு, மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் கொள்கைகளை ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன என்பதையே ரஷ்ய அதிபரின் பேச்சு காட்டுகிறது.

பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார். முன்னதாக 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: External Affairs Minister S JaishankarPM ModiIndiaMake in indiaRussian president putin
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூரில் இடிந்துவிழும் நிலையில் அம்மன் கோயில் மண்டபம் – சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்!

Next Post

மெகா திட்டங்கள் ரெடி : சுற்றுலாவில் மாலத்தீவை மிஞ்சப்போகும் லட்சத்தீவு – சிறப்பு கட்டுரை!

Related News

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

நாடெங்கும் கரைபுரளும் உற்சாகம் : தீபாவளி பரிசாக GST குறைப்பு – யாருக்கு என்ன பலன்?

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

தெருநாய் விவகாரம் – அரசுக்கு நீதிமன்றம் யோசனை!

காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் : தமிழக அரசுக்கு உயர் நீீதிமன்றம் கெடு!

சென்னையில் ஆர்சியான் கெமிக்கல் நிறுவனம் தொடர்பான இடங்களில் ரெய்டு!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 7வது முறையாக மீண்டும் முதலிடம் பிடித்த சென்னை ஐஐடி!

முதல் பயணத்திலேயே விபத்துக்குள்ளான டோல்ஸ் வென்டோ சொகுசு கப்பல்!

சேலம் மாவட்டத்தில் 1 மாதத்தில் ரேபிஸால் மூவர் பலியான சோகம்!

ஜோகோவிச் விளையாடியதை கண்டு ரசித்த தோனி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies