ஈரோட்டில் நடைபெற்று வரும் இந்து அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
வேப்பம்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.
2 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வடதமிழக ஆர்.எஸ்.எஸ். செயலாளர் ஜெகதீசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் இந்து அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் தலைமை பண்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.