உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கான பணிகள் தொடங்கியுள்ளன.
பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி தை மாதம் 1-ஆம் தேதி அவனியாபுரத்திலும் 2-ம் தேதி பாலமேட்டிலும் 3-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
இதையொட்டி பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் பிரசித்தி பெற்ற வலையபட்டி ஸ்ரீமஞ்சமலை சுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜை செய்தனர்.
அதனை தொடர்ந்து பாலமேட்டில் உள்ள மஞ்சமலை ஆற்று திடல் வாடிவாசலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து ஜல்லிக்கட்டு விழாவுக்கான அழைப்பிதழ்களை வழங்கும் பணிகள் தொடங்கி உள்ளன.