200 தொகுதிகளும் ஜெயித்து விடுவோம் என திமுக சொல்வது இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் நடைபெற்ற இலவச மருத்துவ சிகிச்சை முகாமில் செல்லூர் ராஜு கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழை வெள்ளத்தை திமுக அரசு சரியாக கையாளவில்லை என்றும், தரம் இல்லாத நலத்திட்ட பொருட்களை மக்களுக்கு கொடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
நாட்டில் மன்னர் பரம்பரையை ஒழித்து விட்டோம், ஆனால் கலைஞர் பரம்பரையை இன்னும் ஒழிக்க முடியவில்லை என செல்லூர் ராஜு விமர்சித்தார். திருமாவளவனுக்கு யாரும் நெருக்கடியை கொடுக்க முடியாது என்றும், மற்றவர்கள் பேசுவார்கள் என்று திருமாவளவன் அடக்கி வாசிக்கிறார் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.