உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா ஏற்பாடுகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
பிரயாக்ராஜில் மகா கும்பமேளா அடுத்த ஆண்டு கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி, கங்கை நதிக்கரையில் லட்சக்கணக்கான துறவிகள் திரள்வது வழக்கம். இந்த நிலையில், கும்பமேளா ஏற்பாடுகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை அளித்தார். பின்னர் அங்குள்ள புத்தக கடைக்குச் சென்ற அவர், இரண்டு புத்தகங்களை வாங்கி அதற்கான தொகையை யுபிஐ மூலம் செலுத்தினார்.
இதையடுத்து கங்கை நதியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே பாலத்தின் உறுதித்தன்மையை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். அந்த வழித்தட வரைபடத்தையும் அவர் பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.