புதுச்சேரியில் தங்கள் பகுதியில் மத்திய குழுவினர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவில்லை எனக்கூறி, ஆதிதிராவிட மக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் 2 நாட்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். டி.என்.பாளையத்தில் ஆய்வு நடத்திய அவர்கள் அப்பகுதியில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதனால், அதிகாரிகளின் வாகனங்களை மறித்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மழையால் தாங்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள மழை நீரில் சேதமடைந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், தங்களுக்கு உதவ எந்த அரசு அதிகாரியும் முன்வரவில்லை எனவும் ஆதி திராவிட மக்கள் குற்றம்சாட்டினர்.