கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முருகப்பெருமானின் வேலுக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்தும், தீபாராதனை காட்டியும் வழிபட்டனர்.
இந்து அன்னையர் முன்னணி சார்பில் சென்னிமலை, பழனி மற்றும் மருதமலை உள்ளிட்ட 7 கோயில்களில் வேலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பல்வேறு பகுதிகளுக்கும் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட வேல், மேட்டுப்பாளையத்தில் சுப்ரமணியர் சாமி கோயில் வளாகத்திற்கு வந்தது. அப்போது, வேல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.