சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணியளவில் சட்டமன்ற கூட்டம் தொடங்கியதை அடுத்து மறைந்த உறுப்பினர்களுக்கும், சீதாராம் யெச்சூரி, ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிலையில், துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு அவையின் முதல் வரிசையில் 3வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கிய நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.