கொச்சி கடலில் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த கேரள மீனவர்கள் 6 பேரை தமிழக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
கேரள மாநிலம் புதுக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவருடைய நாட்டு படகில் 6 பேர் கொச்சின் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென படகு கவிழ்ந்ததில் மீனவர்கள் 6 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
இந்த நிலையில், அவ்வழியாக சென்று கொண்டிருந்த இம்மானுவேல் என்பவரது விசைப்படகில் இருந்த தமிழக மீனவர்கள், தத்தளித்துக் கொண்டிருந்த கேரள மீனவர்களை பத்திரமாக மீட்டனர்.
ஆனால், நாட்டு படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை மீட்க முடியாததால் அவை கடலில் மூழ்கின.