கெத்து காட்டுவது யார்? : மதுரையில் மல்லுக்கட்டும் செல்லுார் ராஜூ - சரவணன்!
Jul 25, 2025, 05:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கெத்து காட்டுவது யார்? : மதுரையில் மல்லுக்கட்டும் செல்லுார் ராஜூ – சரவணன்!

Web Desk by Web Desk
Dec 9, 2024, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையிலும், டாக்டர்.சரவணன் தலைமையிலும் அதிமுக நிர்வாகிகள் இரு பிரிவுகளாக செயல்படுவது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக செல்லூர் ராஜூ பணியாற்றி வரும் நிலையில், மருத்துவரணியின் இணை செயலாளராக டாக்டர்.சரவணன் பொறுப்பு வகித்து வருகிறார். நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர்.சரவணன், 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்த தோல்வியால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளான அதிமுக தொண்டர்கள், செல்லூர் ராஜூ தான் இதற்கு காரணம் எனவும், சரவணன் தோல்வியடைய வேண்டும் என்றே செல்லூர் ராஜூ உள்ளடி வேலை பார்த்ததாகவும் முணுமுணுத்துக் கொண்டனர். இந்த தோல்வியின் எதிரொலியாக சரவணனுக்கும், செல்லூர் ராஜூவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதிமுகவினர் மத்தியில் பேசப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கடந்த நவம்பர் 25ம் தேதி கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் செம்மலை கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கிய நிலையில், அதிமுக நிர்வாகிகள் சிலர் மேடையில் ஏறி குறைகளை சுட்டிக்காட்ட முயன்றனர். செல்லூர் ராஜூ மீது அவர்கள் புகார் கூற முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்லூர் ராஜூவின் ஆதரவாளர்கள், மேடையில் ஏறிய நிர்வாகியை சரமாரியாக அடித்து கீழே தள்ளினர்.

அமைச்சர் செல்லூர் ராஜூவும் “அவரை அடிங்க” என மைக்கிலேயே பேசினார். மேடையில் அமர்ந்திருந்த செம்மலை, அருகில் அமர்ந்திருந்த மருத்துவர் சரவணனை கைகாட்டி இவர்தான் எல்லாவற்றிற்கும் காரணம் எனக் கூறினார்.

தொடர்ந்து கள ஆய்வுக்கூட்டம் நிறைவு பெற்றவுடன் வெளியில் வந்த மருத்துவர் சரவணன், “அதிமுக ஒரு ஜனநாயக இயக்கம்; இதெல்லாம் சாதாரணம்” எனக்கூறி அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

மதுரை அதிமுகவை 4 மாவட்டங்களாக பிரித்து அதில் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை பெற சரவணன் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், சரவணன் வளர்ந்தால் அது தனது இடத்தை கேள்விக்குறியாக்கும் என செல்லூர் ராஜூ நினைப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இருவருக்கும் இடையிலான மோதலை உறுதிப்படுத்தும் வகையில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் செல்லூர் ராஜூ ஆதரவாளர்களும், மருத்துவர் சரவணன் ஆதரவாளர்களும் தனித்தனியாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த செல்லூர் ராஜூ, சரவணனை தவிர்த்து அங்கிருந்த மற்ற அனைவருக்கும் வணக்கம் வைத்தார்.

செல்லூர் ராஜூ, சரவணன் இடையிலான மோதல் கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் என ஆதங்கம் தெரிவிக்கும் அதிமுக தொண்டர்கள், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

Tags: tn politicsWho is showing off? : Sellar Raju - Saravanan to fight in Madurai!DMKADMK
ShareTweetSendShare
Previous Post

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்!

Next Post

விண்வெளியில் விண்கலங்களை இணைக்கும் சோதனை : இஸ்ரோவின் அடுத்த அசத்தல் – சிறப்பு கட்டுரை!

Related News

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

குளச்சல் அருகே சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

சக்தி திருமகன் படம் – மாறுதோ பாடல் வெளியானது!

நடப்பனஹள்ளி கருப்பசாமி கோயிலில், மிளகாய் யாகமும், பூசாரிக்கு மிளகாய் தூள் கரைசலால் அபிஷேகம்!

கள்ளக்குறிச்சி போலீசார் கண்முன்னே கடுமையாக தாக்கிக் கொண்ட பாமக, தவெகவினர்!

இந்திய ரயில்வேயில் ஒரு நிமிடத்தில் 1,50,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வசதி : சர்வர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies