சிரியாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள், பாதாள சிறையிலிருந்த கைதிகளை விடுவித்தனர்.
சிரியா தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால் அந்நாட்டின் அதிபர் அங்கிருந்து தப்பி ரஷ்யாவில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சாய்டநேயா நகரில் உள்ள பாதாள சிறைக்குச் சென்ற கிளர்ச்சியாளர்கள், அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுவித்தனர். இதனால் கைதிகள் கைகளை உற்சாகமாக அசைத்தவாறு சிறையிலிருந்து வெளியேறினர்.