மாநிலங்களவை நடவடிக்கைக்கு இடையூறு விளைவிப்பதே காங்கிரஸின் நோக்கம் என பாஜக தேசிய தலைவர் இடையூறு விளைவிப்பதே காங்கிரஸின் நோக்கம்குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மூத்த அரசியல் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவை தலைவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.
அவையில் மல்லிகார்ஜுன கார்கே பேச போதிய அவகாசம் அளித்த போதிலும், அவர் அதை மறுப்பது வேடிக்கையாக இருப்பாக ஜெ.பி. நட்டா விமர்சித்தார்.
தனது அறைக்கு வந்து குறைகளைத் தெரிவிக்குமாறு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் அழைப்பு விடுத்ததாக கூறிய ஜெ.பி. நட்டா, ஆனால் அதை கார்கே ஏற்க மறுத்துவிட்டதாக குறிப்பிட்டார்.
மேலும், அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்காமல், இடையூறு விளைவிப்பதே காங்கிரஸின் நோக்கம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்
.