சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு விரைவில் 7 ஆயிரத்து 425 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விரைவில் ஒதுக்கீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாதவரம்- சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி மற்றும் மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மொத்தம் 63 ஆயிரத்து 846 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்படும் இத்திட்டத்தில், மத்திய அரசு அதன் பங்காக 7 ஆயிரத்து 425 கோடி ரூபாயை நிகழ் நிதியாண்டின் இறுதிக்குள் படிப்படியாக விடுவிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 33 ஆயிரத்து 593 கோடி ரூபாயை மத்திய அரசு பல்வேறு முகமைகளிடமிருந்து கடனாக பெற்றுத் தரும் என்றும், எஞ்சிய 22 ஆயிரத்து 228 கோடி ரூபாயை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் தகவல் வெளியானது.
நிதி ஒதுக்கீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய, மாநில அரசுகள் இடையே விரைவில் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.