புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்படும் அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது.
வீடூர் அணையில் இருந்து அதிகளவு உபரிநீர் வெளியேற்றப்படுவதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், சங்கராபரணி ஆற்று பாலத்தின் கீழ் ஆபத்தை உணராமல் இளைஞர் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து ஆற்றை கடக்க முயற்சி செய்த அந்த இளைஞர் நீரில் அடித்துச்செல்லப்பட்டார்.
இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.