ஆயிரம் கோடி வசூலை விட ரசிகர்களின் அன்புதான் நிரந்தரமானது என நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெல்லியில் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அல்லு அர்ஜூன், ஆயிரம் கோடி வசூல் என்பது தற்காலிகமானதுதான் என கூறினார்.
மேலும், இந்த சாதனையை விரைவில் மற்றுமொரு திரைப்படம் முறியடிக்க வேண்டும் எனவும், அதுவே வளர்ச்சி எனவும் அல்லு அர்ஜூன் பேசினார். அண்மையில் ஹைதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படத்தை காண வந்த பெண் நெரிசலில் சிக்கி பலியானார். இதனை குறிப்பிட்டு வாய்மொழியாக மட்டுமே ரசிகர்கள் மீது அல்லு அர்ஜூன் அன்பு பாராட்டுவதாக பலரும் விமர்சித்துள்ளனர்.