நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரித்து கூறியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அப்பா பேச்சை கேட்காதவர் தான் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்,
மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறவில்லை என சட்டமன்றத்தில் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளதாகவும், சென்னையை மட்டுமே திமுக அரசு கருத்தில் கொண்டுள்ளதாகவும், பிற மாவட்டங்களையும் திமுக அரசு கண்காணிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
பக்தர்களின் நன்கொடையில் தான் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதாக சிஎஜி அறிக்கை கூறுவதாகவும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.