திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் குறைதீர்க்கும் மின்னணு புகார் பெட்டி பயன்பாட்டுக்கு வந்தது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து கோயில் நிர்வாகத்திடம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், அறநிலையத்துறை சார்பில் மின்னணு புகார் பெட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலைக்கோயில் பதிவு அலுவலகம் பகுதியில் உள்ள புகார் பெட்டியை கோயில் இணை ஆணையர் ரமணி, தொடங்கி வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.