ஆரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது. இதனால், ஆண்டார்மடம் மக்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக படகில் பயணித்து வருகின்றனர்.
தொடர் கனமழை காரணமாக பிச்சாடூர் அணையிலிருந்து 5 ஆயிரத்து 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டதால், ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், ஆண்டார் மடம், பழவேற்காடு தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கியதால், அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக படகில் ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர். மேலும், கடப்பாக்கம் மற்றும் காட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.