சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியது.
சென்னை வானகரகத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தொடங்கியது.
இந்த கூட்டத்தில், உட்கட்சி தேர்தல், 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டங்ஸ்டன் தொழிற்சாலை, மீனவர்கள் கைது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.