சென்னை ராமாபுரத்தில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதேபோல் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு பாஜகவை சேர்ந்த குஷ்புவும் அஞ்சலி செலுத்தினார்.