நாடாளுமன்றத்தில் இன்று தாக்கலாக இருந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி, வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.
கூட்டம் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் பிரச்சினை ஆகியவற்றை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
இதற்கிடையே, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 12-ம் தேதி ஒப்புதல் அளித்ததையடுத்து மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த மசோதாவானது இன்று தாக்கல் செய்யப்பட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
துணை மானிய கோரிக்கைகள் நிறைவேறிய பிறகு, இந்த வாரத்தில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.