வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி குறைந்த காற்றுழத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி வங்கக்கடலில் காலை 8.30 மணியளவில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.