பிரதமர் மோடி நாளை ராஜஸ்தான் பயணம்! - ரூ.46,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!
Nov 15, 2025, 02:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடி நாளை ராஜஸ்தான் பயணம்! – ரூ.46,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

Web Desk by Web Desk
Dec 16, 2024, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாளை ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் குடிநீர் துறை தொடர்பான ரூ.46,300 கோடி மதிப்பிலான 24 திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

நாளை ராஜஸ்தான் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘ஓர் ஆண்டு- சிறந்த வளர்ச்சி’ என்ற ராஜஸ்தான் மாநில அரசின் ஓர் ஆண்டை நிறைவு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் குடிநீர் துறை தொடர்பான ரூ.46,300 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார்.

7 மத்திய அரசு திட்டங்கள், 2 மாநில அரசு திட்டங்கள் உட்பட ரூ .11,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 9 திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, 9 மத்திய அரசு திட்டங்கள் மற்றும் 6 மாநில அரசு திட்டங்கள் உட்பட ரூ.35,300 கோடிக்கும் அதிக மதிப்பிலான 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

நவ்நேரா தடுப்பணை, நவீன மின்சார பரிமாற்ற கட்டமைப்பு மற்றும் சொத்து மேலாண்மை அமைப்பு திட்டங்கள், பில்டி – சம்தாரி – லூனி – ஜோத்பூர் – மெர்தா சாலை – தேகானா – ரத்தன்கர் ரயில் வழித்தட பிரிவில் மின்மயமாக்கல் மற்றும் தில்லி – வதோதரா பசுமை தள சீரமைப்பின் 12-ம் தொகுப்பு (தேசிய நெடுஞ்சாலை – 148 என்) தொகுப்பு 12 (மாநில நெடுஞ்சாலை – 37ஏ சந்திப்பு வரை மெஜ் ஆற்றின் மீது கட்டப்படும் மேம்பாலம்) ஆகிய திட்டங்கள் இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்படும்.

இந்தத் திட்டங்கள் மக்களுக்கு எளிதான பயணத்திற்கு வழிவகுக்கவும், பிரதமரின் பசுமை எரிசக்தி தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப மாநிலத்தின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவும்.

ரூபாய் 9 ஆயிரத்து 400 கோடி செலவில், ராம்கர், மஹல்பூர் தடுப்பணை கட்டும் பணிக்கும், சம்பல் ஆற்றின் மூலம் நவ்நேரா தடுப்பணையிலிருந்து பிசல்பூர் மற்றும் இசர்தா அணைக்கு நீர் விநியோக அமைப்புக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

அரசு அலுவலகக் கட்டிடங்களில் மேற்கூரை சூரிய மின்சக்தி ஆலைகளை நிறுவுதல், பூகலில் (பிகானேர்) 2000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி பூங்கா மற்றும் 1000 மெகாவாட் சூரிய பூங்காக்களின் இரண்டு கட்டங்கள் மற்றும் சாய்பாவில் இருந்து (தோல்பூர்) பரத்பூர்-தீக்-கும்ஹர்-நகர்-கமான் & பஹாரி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் மற்றும் சம்பல்-தோல்பூர்-பரத்பூர் மறுசீரமைப்பு பணிகள் ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். லூனி – சம்தாரி – பில்டி இரட்டை ரயில் பாதை, அஜ்மீர் – சந்தேரியா இரட்டை ரயில் பாதை, ஜெய்ப்பூர் – சவாய் மாதோபூர் இரட்டை ரயில் பாதை திட்டம் மற்றும் இதர எரிசக்தி பரிமாற்றம் தொடர்பான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

Tags: PM ModiRajasthanPrime Minister Modi will visit Rajasthan tomorrow! - Launches projects worth Rs.46300 crore!
ShareTweetSendShare
Previous Post

ராஜாதி ராஜா குகேஷ் : சதுரங்க உலகின் முடிசூடா மன்னன் – சிறப்பு தொகுப்பு!

Next Post

AI-யை களமிறக்கிய மத்திய அரசு : 80 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு – சிறப்பு கட்டுரை!

Related News

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

ஜம்மு-காஷ்மீா் : காவல்நிலையத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலி!

பீகார் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத புஷ்பம் பிரியா சவுத்ரி!

பீகார் வெற்றி – அண்ணாமலை பெருமிதம்!

சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்த நாள் – தலைவர்கள் மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மதுரை மத்திய சிறைக்குள் செல்போன் எடுத்துச்சென்ற விவகாரம் – 3 கைதிகள் வழக்குப்பதிவு!

தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு – 4.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

திருப்போரூர் அருகே விபத்துக்குள்ளான சிறிய ரக பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

அயர்லாந்து கடற்கரையொர வீதிகளை மூழ்கடித்த கடல் நுரை – மக்கள் அச்சம்!

ஜப்பான் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்திய சீன அரசு!

எச்-1பி விசாவை நீக்க மசோதா தாக்கல் செய்வேன் : அமெரிக்க பெண் எம்.பி!

ஷென்சோ – 21 விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்!

தாய்லாந்தில் மதிய நேர மதுபான விற்பனைக்கான தடைக்கு விலக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies