கோவை குண்டுவெடிப்பு சம்பவ குற்றவாளி அல்-உம்மா பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர் பாஷா உயிரிழந்ததை, போராளி போல் போற்றுவதா? என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டோரை ‘ஹீரோக்களாக’ சித்தரிப்பது குண்டுவெடிப்பு நிகழ்த்தியதை விட படுபாதக செயல் என கூறியுள்ளார்.
பாஷா, பரோலில் வெளியே வந்துள்ள கொலைக் குற்றவாளி என்பதை தமிழ்நாடு அரசு மறந்து விடக்கூடாது எனவும் அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதிப்பது கோவை குண்டுவெடிப்பில் பறிபோன 58 உயிர்களை அவமதிக்கும் செயல் என்றும் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
எல்லோருக்குமான முதலமைச்சர் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் ஸ்டாலின், இந்த வரலாற்று தவறை செய்ய மாட்டார் என நம்புகிறேன் என நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.