ரஷ்ய தலைநகர் 4மாஸ்கோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரி கொல்லப்பட்டார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அடுக்குமாடி கட்டடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரில் குண்டு வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதில், ரஷ்ய ராணுவத்தின் அணு, உயிரியல் மற்றும் ரசாயன பாதுகாப்பு படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் Igor Kirillov மற்றும் அவரது உதவியாளர் ஒருவர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக Igor Kirillov மீது பிரிட்டன் குற்றம்சாட்டிய நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டை கடந்த நிலையில், இந்தத் தாக்குதலுக்கு உக்ரைனே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக ரஷ்ய ராணுவம் விசாரணையைத் தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.