சென்னை கொடுங்கையூரில் சமையல் கலைஞர்கள் ஒன்றிணைந்து 100 கிலோ இட்லியை பயன்படுத்தி செஸ் போர்டில் உலக செஸ் சாம்பியன் குகேஷின் உருவத்தை அமைத்து அசத்தியுள்ளனர்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி பெற்று இளம் உலக செஸ் சாம்பியனாக மகுடம் சூடினார். 18 வயதில் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த அவரின் சாதனையை பாராட்டும் விதமாக, சென்னை கொடுங்கையூரில் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர்.
அதில் 12 சமையல் கலைஞர்கள் ஒன்றிணைந்து 100 கிலோ இட்லியால் சதுரங்க போர்டு அமைத்து அதில் குகேஷின் உருவத்தை உருவாக்கி அசத்தினர். இதனை காண வந்த பார்வையாளர்களுக்கு, இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.