கடலூர் அருகே படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரின் உடல் 3 நாட்களுக்கு பிறகு கரை ஒதுங்கியது.
சித்திரப்பேட்டையைச் சேர்ந்த ஜெகன் என்பவர், நேற்று முன்தினம் சக மீனவர்களுடன் சேர்ந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்.
அப்போது கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்ததில், இரு மீனவர்கள் மட்டும் படகை பிடித்து உயிர் தப்பினர். மாயமான மீனவர் ஜெகனை தேடும் பணி 3 நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஜெகனின் உடல் சாமியார்பேட்டை அருகே கரை ஒதுங்கியது. உடற்கூராய்வுக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது.