எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
டாக்டர் அம்பேத்கர் குறித்த கருத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவையிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் அமளியில் ஈடுட்டனர்.
மேலும், அவைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே, திமுக எம்பி-க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.