கிரிக்கெட் வீரர் அஸ்வின் டீம் இந்தியாவின் ஈடு செய்ய முடியாத சொத்து என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அஸ்வினுக்கு மனமார்ந்த நன்றி.
அவர் பன்முக கிரிக்கெட் வீரர், நமது தேசத்தின் பெருமைக்கு அவரது பங்களிப்பு அளவிட முடியாதது.
டீம் இந்தியாவின் ஈடு செய்ய முடியாத சொத்து, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தது தாம் உட்பட தீவிர ரசிகர்கள் பலருக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டின் நுணுக்கங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு அதிவேக சுழற்பந்து வீச்சாளர், அவர் தனது புத்திசாலித்தனம் மற்றும் விளையாட்டுத்திறன் மூலம் அனைவரையும் ஊக்கப்படுத்தியுள்ளார். அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என அண்ணாமலை கூறியுள்ளார்.